Chocolate Recipe:தமிழர்களின் வழிமரபில் பரம்பரை பரம்பரையாக கடைபிடித்த வாழ்க்கை முறைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றது பனைத்தொழில். தமிழர்களால் "இயற்கையின் புனித மரம்” என்றும் போற்றப்படுகிறது. பனைமரம் (Borassus flabellifer) பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய, மிகவும் சகிப்புத்தன்மை மற்றும் நீர் இல்லாமல் வளரக்கூடிய மரமாகும். இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது.
கருப்பட்டி
கருப்பட்டி பனைமரத்தில் இருந்து வரும் பதனீர் வைத்து செய்து கிடைப்பதாகும். பதனீரை நெருப்பிட்டு செய்வதில் நிறைய முறைகள் அல்லது வகைகள் உள்ளனர். சில வகைகள் கலப்படம் செய்தும் விற்ப்பார்கள். அதனால் கருப்பட்டி வாங்கும் போது கவனமாக வாங்குங்கள். (குறிப்பு: சுத்தமான கருப்பட்டி மணமாக இருக்கும்.) கருப்பட்டியை கட்டியாக ஒரு வடிவத்தில் விற்ப்பார்கள்.ஆனால் அக்கருப்பட்டியை விட மண்பாணையில் கருப்பட்டியை காய்த்து ஒரு பதத்திற்கு வந்தவுடன் அதனை மனப்பாணையில் ஊற்றி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு புரியுமாறு சொல்லவேண்டும் என்றால் கட்டியாக இருக்கும் சாக்லெட்டை உருக்கினால் எந்த பதத்தில் இருக்குமோ அப்படித்தான் மண்பானை கருப்பட்டி இருக்கும். பழங்காலத்தில் வாழ்ந்த கிராமப்புற மக்கள் அதிகமாக இதை சாப்பிட்டுத்தான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
கருப்பட்டியை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:
கருப்பட்டியில் இரும்புச்சத்து (Iron) அதிகமுள்ளதால், இரத்த சோகை (Anemia) பிரச்சனையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்தால் ஹீமோகுளோபின் அளவு உயரும். மேலும், இதில் நார்ச்சத்து (Dietary fiber) செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இது குடலுழற்சியை சீராக்குவதிலும் உதவுகிறது.
கருப்பட்டியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், ஃபாஸ்பரஸ், சோடியம் போன்ற கனிமச் சத்துக்கள் இருப்பதால், எலும்புத் தசை வலி, நரம்பு இயக்கம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இது ஆண்டி-இன்பிலம்மட்ரி(anti-inflammatory) உணவாகவும் செயல்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற நிலைகளை நிவர்த்தி செய்யவும் பயன்படுகிறது. பச்சை சுக்கு, இஞ்சி, மிளகு, திப்பிலி ஆகியவைகளுடன் சேர்த்து கருப்பட்டியால் தயாரிக்கப்படும் கஷாயம் சிறந்த சளி நிவாரண மருந்தாக இருக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வலியை குறைக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு. மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்கவும் கருப்பட்டி உதவுகிறது. கருப்பட்டியை தினமும் சிறு அளவில் எடுத்துக்கொண்டால், தொல்லைகளின்றி மாதவிடாய் நிகழும். மேலும் கருப்பட்டி தொல்லை இல்லாத இனிப்பு என்பதால் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
கருப்பட்டியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை சருமத்திற்கும் பலனளிக்கின்றன. கருப்பட்டியை தினமும் சாப்பிடுவதால் சருமம் பளிச்சென்று இருக்க உதவுகிறது. மேலும், முகப்பருக்கள், கருப்பு தழும்புகள் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை மருந்தாகவும் கருப்பட்டி இருக்கிறது. வெள்ளைச் சர்க்கரையின் தீமையை தவிர்த்து, சத்து நிறைந்த சிறந்த மாற்றுப்பொருளாக கருப்பட்டி பரிசீலிக்கப்படுகிறது. இது பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இருக்கும் குழந்தைகள் சாக்லேட் வேண்டும் என்று அடம் பிடிப்பது எல்லோரது வீட்டிலும் உண்டு. அவ்வாறு இருக்க குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சாக்லேட் வீட்டிலே தயாரித்து கொடுக்கலாம்.கருப்பட்டியை பயன்படுத்தி வீட்டிலிருந்தே மிகவும் சுலபமாக சாக்லேட் தயாரிப்பது எப்படி என்பதை கீழே விரிவாகப் பார்க்கலாம்.
வீட்டுமுறை சாக்லேட் ரெசிபி
தேவையானப் பொருட்கள்:
- சுத்தமான கருப்பட்டி(Palm Jaggery) - 1/4 கப்
- சாக்லேட் பவுடர்(COCO Powder)-1/2 கப்
- வெண்ணெய்(Butter) -1/4 கப்
- சுக்கு பவுடர்(Dried Ginger Powder) - 1/2 டீஸ்பூன்
பாதாம்(Almonds), முந்திரி(Cashews), பிஸ்தா(Pistachio), வால்நட்(Walnut)-தேவையான அளவு (உங்கள் விருப்பம்), நட்ஸ் சேர்த்தால் சுவை அதிகமாகும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
கருப்பட்டி, சாக்லேட் பவுடர் இரண்டையும் மிக்சி ஜாரில்(Mixer Jar) போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் பாத்திரத்தில்(Stainless Steel) வெண்ணெயை போட்டு உருக்கி கொள்ளுங்கள். உருக்கிய வெண்ணையை கருப்பட்டி மற்றும் சாக்லேட் உடன் சேர்த்து கொள்ளுங்கள். மேலும், அதனுடன் 1/2 டீஸ்பூன் சுக்கு பவுடர் சேர்த்து மிக்சி ஜார்(Mixer Jar) பயன்படுத்தி அனைத்தும் ஒரே பதத்திற்க்கு வருமாறு தயார் செய்து கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் இருப்பதை சாக்லேட் வடிவ பாத்திரத்தில்(Bakeware Moulds & Tins) எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் தேவையான அளவு சேர்த்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டில் இரண்டு மணிநேரம் வையுங்கள்.அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான வீட்டுமுறை சாக்லேட் தயார். உங்கள் வீட்டு குழந்தைகள் சாக்லேட் சாப்பிட விருப்பினால் செய்து கொடுங்கள். உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
கவனித்துக்கொள் நண்பா!நண்பி!
சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
(சர்க்கரை நோயாளிகள்) ராசாயன கலப்படமில்லாத தூய்மையான கருப்பட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Social Plugin