Blackheads Removal Home Remedies: முகத்தின் அழகை வெளிப்படுத்துவதில் மூக்கிற்கு அதிகப் பங்கு உண்டு. மூக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் மூக்கின் அழகை கெடுப்பது மட்டும்மில்லாமல் முகத்தின் அழகையும் சேர்த்து கெடுக்கும். நிறைய பேர்களுக்கு மூக்கில் கரும்புள்ளிகள் இருப்பதுண்டு.மூக்கில் அதிகமாகத் தோன்றும் கரும்புள்ளிகள் கோமெடோ (Comedo) வகையாகும். இவை முகத்தின் அழகை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் சுத்தமாக இல்லாதது போல தோற்றமளிக்கும்.இதனை சரி செய்வது மிகவும் சுலபம்.வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து பேக் தயாரித்து கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடலாம்.
கரும்புள்ளிகள் உருவாகும் விதம்:
நம் முகச்சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) எண்ணெய் (Sebum) சுரக்கின்றன.அந்த எண்ணெய், இறந்த செல்கள், தூசி மற்றும் அழுக்கு சேர்ந்து சருமத் துளைகள் (pores) அடைபடுகிறது.இவ்வாறு அடைந்த துளைகள் காற்றில் வெளிப்படும்போது ஆக்ஸிடேஷன் (oxidation) ஏற்பட்டு கருப்பு நிறமாக(Blackheads) மாறுகிறது.அதை தான் கரும்புள்ளிகள் என்று நாம் கூறுகிறோம்.
அதிகமாக மூக்கில் தோன்றக் காரணங்கள்:
மூக்கு பகுதியில் அதிக எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், கரும்புள்ளிகள் அங்கு எளிதில் உருவாகின்றன.
அடிக்கடி தூசி, மாசு நிறைந்த சூழலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.தினமும் சருமத்தை சரியாக சுத்தம் செய்யாதது ,அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகள் சாப்பிடுவது மற்றும் ஹார்மோன் மாற்றங்கலால் (Hormonal changes) மூக்கில் அதிகமாக கரும்புள்ளிகள்(Blackheads) தோன்றுகிறது.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் நோஸ் பேக், கரும்புள்ளிகளை மட்டும் நீக்காமல், துளைகளை சுத்தப்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் மாற்றுகிறது.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நோஸ் பேக் தயாரித்து கரும்புள்ளிகளை(Blackheads) எளிதில் நீக்கிவிடலாம். கீழே நோஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம்.
கரும்புள்ளிகளை நீக்கும் நோஸ் பேக்(Blackheads Removal Pack)
தேவையானப் பொருட்கள்:
- கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
- காபி பவுடர் - 1/2டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சைப் பழம் - 1
- மஞ்சள் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில்() போட்டு அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு கலந்துக் கொள்ளுங்கள். 5-10 நிமிடம் காற்றுப்புகாத இடத்தில் வையுங்கள். பின் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் இந்த பேக்கை பயன்படுத்துங்கள். முதலில் பயன்படுத்தும்போது சிறிது மாற்றம் தெரியும். தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். வாரத்திற்கு மூன்று முறை என்று பயன்படுத்துங்கள். கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடலாம்.
கரும்புள்ளிகளை நீக்க பயனுள்ளதை தினமும் செய்யலாமே!!!
- தினமும் முகத்தை சுத்தமாக வைத்திருத்தல். குறைந்தபற்றமாக தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவ வேண்டும்.
- அதிக தண்ணீர் குடித்து உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாரத்தில் 2–3 முறை ஸ்க்ரப் பயன்படுத்தி மூக்கில் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.
- எண்ணெய் கட்டுப்படுத்தும் (oil control) பேக் பயன்படுத்துதல் சிறந்தது.
- அதிக எண்ணெய் உள்ள உணவுகளை குறைத்து, காய்கறி, பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கரும்புள்ளிகளை அகற்றுவதற்கு பேக் பயன்படுத்தும் போது , அவற்றை எளிதில் கட்டுப்படுத்தவும் நீக்கவும் இயலும். முதல் முறை பேக் பயன்படுத்தும் போது மூக்கில் சிறிது மாற்றம் ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்தும் போது மூக்கில் இருக்கும் அனைத்து கரும்புள்ளிகளும் நீங்கி காணாமல் போய் விடும். இயற்கையான பொருட்களால் தயாரிக்கும் இந்த நோஸ் பேக், சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்தி, கரும்புள்ளிகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.

Social Plugin