Sweet Potato:ஒரு சிறு கிழங்கில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!


View This Image


சக்கரைவள்ளிக்கிழங்கு(Sweet Potato)

Sweet Potato Benefits in Tamil:உலகம் முழுவதும் முக்கியமாக பயிரிடப்படும் கிழங்கு வகைகளில் சக்கரைவள்ளிக்கிழங்கும்(Sweet Potato)  ஒன்றாகும்.இக்கிழங்கு எளிதில் வளரக்கூடியது. அதுவும் இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுகின்றனர்.  குறைந்த விலையில் அதிக சத்துக்களை சர்க்கரைவள்ளிக்கிழங்கு தருவதால் மக்கள் அதிகமாக வாங்கியும்  சாப்பிடுகின்றனர். இக்கிழங்கு அதிகப்பற்றமாக வறட்சி மற்றும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்டு வளரும் திறன் கொண்டதால், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் தரக்கூடியதாக சக்கரைவள்ளிக்கிழங்கு (Sweet Potato) அமைந்திருக்கிறது.இக்கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. 


சக்கரைவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவாக மட்டுமில்லாமல், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவற்றில் சிறந்தாக இருக்கிறது.  இக்கிழங்கு  எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டதால், அனைவர்க்கும் ஏற்ற உணவாகவும் காணப்படுகிறது.சக்கரைவள்ளிக்கிழங்கை சுட்டு, வேக வைத்து, இனிப்புகள், சிப்ஸ், பானங்கள் போன்ற பலவித உணவுப் பொருட்களாக தயாரித்தும் உண்ணலாம். சில இடங்களில் இதன் இலைகளும் கீரையாக உண்ணப்படுகின்றன.

சக்கரைவள்ளிக்கிழங்கு(Sweet Potato) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தோல் மற்றும் முடிக்கு  ஆரோக்கியம் தரும்:

சக்கரைவள்ளிக்கிழங்கில்(Sweet Potato) இருக்கும் பீட்டா-கரோட்டீன் உடலில் வைட்டமின் ஏ -ஆக மாறி, தோல்  உலர்வதிலிருந்து பாதுகாப்பதுடன், பிம்பிள், சுருக்கம் போன்ற பிரச்சினைகளையும்  குறைக்கிறது. அதேசமயம், விட்டமின் சி  தோலில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, தோலை பளபளப்பாகவும்  இளமையானதுமாகவும்  வைத்திருக்க உதவுகிறது. சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் இ  மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் தோலை சூரிய ஒளி சேதத்திலிருந்து காக்கின்றன. மேலும், இதில் காணப்படும் இரும்பு, துத்தநாகம் (Zinc) மற்றும் செம்பு (Copper) போன்ற தாதுக்கள் முடி வேர் வலுவாக வளர்ந்து, முடி உதிர்தலைக் குறைத்து, ஆரோக்கியமான தலைமுடியை கொடுக்கின்றனர்.

பார்வைத்திறனை மேம்படுத்தும்:

சக்கரைவள்ளிக்கிழங்கில்(Sweet Potato) அதிக அளவில் பீட்டா-கரோட்டீன்(Beta-Carotene) இருப்பதால்  உடலில் வைட்டமின் ஏ-ஆக மாறி கண்களின் பார்வையை பாதுகாக்க உதவுகிறது.குறிப்பாக இரவு நேர பார்வை குறைபாடு (Night Blindness) மற்றும் கண்களின் உலர்ச்சி போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும் திறன் கொண்டது. சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள்(Antioxidants) கண்களில் (Free Radicals) ஏற்படும் சேதத்திலிருந்து காக்கின்றன.மேலும், இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இ கண்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, கண்புரை (Cataract) மற்றும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை குறைக்கும்.சக்கரைவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நீண்ட காலம்  பார்வை திறன் இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்:

அதிக கலோரி கொண்ட உணவுகளை விட சக்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து உண்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலும் சக்தியும் கிடைக்கிறது, அதேசமயம் அதிகப்படியான கலோரிகள் சேராமல் எடை குறையவும் உதவுகிறது. இக்கிழங்கில்  நார்ச்சத்து (Dietary Fiber) அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்துக் கொள்கிறது. இதனால் இடையிடையே அதிக உணவு உண்ணும் பழக்கத்தை குறைக்க முடியும். குறிப்பாக, சக்கரைவள்ளிக்கிழங்கில் குளுக்கோஸ் சுட்டெண் (Low Glycemic Index) குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை திடீரென உயராமல் கட்டுப்பாட்டில் இருக்கும். இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல்  கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.எடை கட்டுப்பாட்டை விரும்புகிறவர்கள்  உணவில் சக்கரைவள்ளிக்கிழங்கைக் கட்டாயம் சேர்த்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.

இதய ஆரோக்கியம் சீராகும்:

சக்கரைவள்ளிக்கிழங்கில் (Sweet Potato)  உள்ள பொட்டாசியம் (Potassium) இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம் (High BP) காரணமாக ஏற்படும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. மேலும், இக்கிழங்கியில்  காணப்படும் நார்ச்சத்து (Dietary Fiber) ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) குறைத்து, நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது. இதனால் இரத்தக் குழாய்கள் அடைபடாமல் சீராக செயல்படுகின்றன. ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி இதயத்தை பல சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இதனால், இதயத் துடிப்பு சீராக இருந்து, நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான இதயத்தைப் பெற உதவுகிறது.

எலும்பு மற்றும் பற்களின் வலிமை வலுப்பெறும்:

சக்கரைவள்ளிக்கிழங்கில் (Sweet Potato) இருக்கும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளின் அடர்த்தியை (Bone Density) உயர்த்தி, எலும்புகள் முறிவு அடையாமல் பாதுகாக்கின்றன. வை ட்டமின் டி மற்றும் வைட்டமின் கே  உடலில் கால்சியத்தை சரியாக உறிஞ்சி எலும்புகளில் சேமிக்க உதவுகின்றன. மேலும், சக்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி பற்களின் ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பற்கள் வலுவாக நிலைத்திருக்க உதவுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) அதிகரிக்கும்:

சக்கரைவள்ளிக்கிழங்கில் (Sweet Potato)  உள்ள பீட்டா-கரோட்டீன், விட்டமின் ஏ, சி, இ முதலியவை உடலில் உள்ள பாதுகாப்பு செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கின்றன. இதில் இருக்கும் இரும்பு மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதால், உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கிறது. குறிப்பாக, வைட்டமின் ஏ சுவாசக் குழாய் மற்றும் செரிமானக் குழாயின் சுவர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றனர். இதனால் தொற்றுகள் எளிதில் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பான்:

சக்கரைவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் தடுப்பில் இயற்கையான பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.இக்கிழங்கியில் அதிகப்படியாக  உள்ள பீட்டா-கரோட்டீன், ஆண்டோசியானின் (Anthocyanin), வைட்டமின் சி மற்றும் இ போன்ற சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் உடலில் பல நோய்களை கட்டுப்படுத்தி, செல்களின் சேதத்தைத் தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன. குறிப்பாக, சக்கரைவள்ளிக்கிழங்கின் ஊதா நிற வகை குடல், மார்பு மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களைத் தடுப்பதில் சிறந்ததாக உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இக்கிழங்கியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடலில் நச்சுப் பொருட்கள் தங்கி புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை  வெகுவாக குறைக்கிறது.அதனால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோயை தடுப்பது எளிதாக இருக்கும்.