Natural Pink Lips at Home:உதடு கருமையாக இருக்கிறது என்று கவலைப்படுறீங்களா? உங்கள் கவலையை போக்க இதோ வந்துடிச்சி!...

View This Image


Get Pink Lips Naturally:ஒருவர் மற்றவரிடம் பேசும்போது முதலில் கண்களை பார்த்துதான் பேசுவார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. கண்களுக்கு அடுத்தப்படியாக பார்ப்பது உதட்டை தான்.அதனால் உதட்டின் அழகும் முக்கியமானதாக உள்ளது. உதடு வறண்டு கருப்பாக  இருந்தால் உங்களின் முகம் பார்ப்பதற்கு அழகு குறைந்து   அழகில்லாமல் காணப்படும்.சில பேர் உதட்டின் அழகை பாதுகாக்க ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட, லிப் ஸ்டிக், லிப் க்ளாஸ், லிப் பாம் போன்ற  ரசாயன பொருட்களை பயன்படுத்துவார்கள். இதை உதட்டில் பயன்படுத்தும் போது  நீங்கள் பேசும்போதும்  அல்லது உணவு அருந்தும்போதும்  உங்கள் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் நோய்கள் ஏற்படவும் செய்யலாம்.இந்த ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டாலும்  உதட்டின் கருமை நிறத்தை எப்படி போக்குவது என்ற கேள்வி உங்களிடம் வரலாம். கவலையை விடுங்க. நான் கீழே குறிப்பிடுவதை செய்தால் போதும். இயற்கையாகவே உங்களின் உதட்டை இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றி விடலாம்.

உதட்டின் கருமை  நிறத்தை மாற்றும் ஸ்கிரப்

தேவையானப் பொருட்கள்:

  • எலும்பிச்சைப்பழம் - பாதி 
  • மஞ்சள்த்தூள்-1/2 Tsp
  • பீட்ருட்  ஜூஸ் - 1 Tsp
  • தேன் -1 Tsp
  • சுத்தமான தேங்காய் எண்ணெய்-1Tsp

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். பின் கலக்கியதை உதட்டில் பூசி  10-15 நிமிடம் நன்கு ஸ்கரப் செய்ய வேண்டும். 15 நிமிடம் கழித்த பிறகு உதட்டை கழுவிப் பாருங்கள்.உதட்டில் நல்ல மாற்றம் தெரியும். தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்துங்கள் உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி விடும். 

இதையும் செய்து பாருங்கள்:


  1. தேவையான அளவு சர்க்கரை, தேன், சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து உதட்டிற்கு பயன்படுத்துங்கள். உதட்டில் நல்ல மாற்றம் கிடைக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால் உதட்டில் இருக்கும் கருமை நீங்கிவிடும்.
  2. தேன், தயிர், வஸ்லின் ஆகிய மூன்றையும் சேர்த்து உதட்டில் ஸ்கிரப் செய்யுங்கள். தொடர்ந்து பயன்படுத்தினால் கருமை உதடு மாறி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவிடும். 
  3. பீட்ரூட்டை பாதியாக எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறை ஊற்றி உதட்டில் ஸ்கிரப் செய்யுங்கள். தொடர்ந்து பயன்படுத்தும்போது உதட்டில் கருமை நீங்கிவிடும்.