Weight Loss Tips in Tamil:உடல் பருமனை குறைப்பது சவாலான விஷயம் என்றாலும் கடின உழைப்பாலும் பொறுமையாலும் எளிதாக வென்று விடலாம்.முதலில் உடல் பருமன் எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கொழுப்புள்ள வறுத்த உணவுகளை அதிகம் உண்பது, தினமும் சோம்பலான வாழ்க்கை முறையை பின்பற்றுவது (காலையில் விழிப்பதில் தாமதம் கொள்வது, சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தாதது, மதியநேரம் தூங்குவது, இரவில் தாமதமாக தூங்குவது), வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது ஒருநாள் செய்தும் மறுநாள் செய்யாமலும் இருப்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பானங்களை அருந்துவது, நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது, உடல் பருமனை குறைப்பதற்காக உணவு உண்ணாமல் இருப்பது,கொழுப்புள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுவது, கறி உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது, ஹோட்டலில் (உணவு விடுதி) உணவு சாப்பிடுவது, வீணாகி விடுமோ என்று தேவையற்ற உணவுகளை சாப்பிடுவது,சர்க்கரை உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிடுவது போன்ற காரணங்களால் உடல் பருத்து காணப்படலாம். இதனை சரி செய்வதில் தவறிவிட்டால் உடலினுள் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இதன் பாதிப்புகளை சிந்தித்து இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பாருங்கள்.
உடல் பருமனை விரைவில் குறைக்கும் சிறந்த டிப்ஸ் கூறப்போகிறேன். நான் சொல்லும் இந்த டிப்ஸை தொடர்ந்து பின்பற்றினால் குறுகிய நாட்களில் உங்களின் உடல் பருமனை எளிதில் குறைத்து விடலாம்.
தினமும் மூன்று வேலையும் (காலை, மாலை, இரவு) சாப்பிடும் உணவு முறைகள்:
காலை உணவை கண்டிப்பாக ஒன்பது மணிக்குள் எடுக்க வேண்டும். இரண்டு டம்ளர் ராகி கஞ்சி(அல்லது) 4 அல்லது 6 இட்லி, கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிடலாம். கோஸ், பீன்ஸ், செளசெள போன்றவைகளைச் சேர்த்து சூப்பாகச் செய்து பருகலாம்.. கீரைவகைகள் நிறைய உள்ளனர். அதிலும் சூப் செய்து பருகலாம்.காய்கறி சாலட் மற்றும் பழக்கலவை செய்தும் சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக சத்துக்களையும் ,புரோட்டீன்களையும் தர வல்லது.
மதிய உணவைக் கண்டிப்பாகப் பகல் 1.30க்குள் எடுக்க வேண்டும். மதியநேரம் திருப்தியாகச் சாப்பிடுங்கள். சாப்பாடு-சாம்பார்-ரசம் -சேர்க்கச் கூடிய காய்கறிகள் -கீரைகள் பழங்கள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரவு நேரம் உணவை 7.30 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இட்லி, தோசை, கோதுமைமாவு தோசை மற்றும் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. இரவு உணவை சாப்பிட பின், தண்ணீர் தவிர வேறெதுவும் விடியும் வரை சாப்பிடக் கூடாது. டையட்டில் இருந்தால் பப்பாளி, மாதுளைப்பழம், சாத்துக்குடி, கொய்யா, ஆரஞ்சு, அத்திப்பழம், வெள்ளரிக்காய் இவைகளை தேவையான அளவு எடுத்து இரவு நேரம் சாப்பிடலாம். இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே குறைந்தபட்சம் 12 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். இத்தகைய உணவு முறைகள் சரியாக 2 முதல் 3 மாதங்கள் வரை இருந்தாலே, சராசரி உடல் எடைக்குத் திரும்பிவிடலாம். `
உணவு முறை சுழற்சியைக் கடைபிடிக்கும் பொழுது மிகுந்த களைப்பு உண்டானால், பத்துநாட்களுக்கு ஒருமுறை இயல்பான உணவுமுறையை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மேற்கொண்டு, மீண்டும் இந்த முறைக்குத் திரும்புங்கள். எளிதான உடற்பயிற்சியுடன் நான் சொன்ன உணவு முறை சுழற்சியைப் பழக்கப்படுத்துங்கள். கண்டிப்பாக உடல் எடை குறையும்.
கொள்ளு உருண்டை
தேவையானப் பொருட்கள்:
- இஞ்சி - சிறிது துண்டு
- பூண்டு - 2 பல்லு
- கொள்ளு - 1/2 டேபிள்ஸ்பூன்
- எலும்பிச்சைபழம் -பாதி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் உரலில் போட்டு மென்மையாக நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.பின் அதனுடன் பாதி எலும்பிச்சைப்பழத்தின் ஜாரை பிழிய வேண்டும். உருண்டை போல் பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இரவு தூங்கும் முன் தயார் செய்துவிட்டு காலையில் எழுந்து சாப்பிட வேண்டும். சாப்பிட பின் வெதுவெதுப்பான சூடுதண்ணீரை பருகுங்கள். உடல் பருமன் சட்டேன்று குறையும். உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கொள்ளுப்பால்
கொள்ளை நன்றாக ஊறவைத்து முளைக்கட்டி வைக்கவும். மறுநாள் இதை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுக்கவும். இதனை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வர, உடல்பருமன், தொப்பை மற்றும் கொழுப்பு, ஊளைச்சதை கரையும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் காலை பூண்டு பானம்
பால் ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பூண்டு இரண்டு பல் மற்றும் சிறிதளவு தேன் போட்டு காலை விழித்த பிறகு காபிக்கு பதில் இந்த பானத்தை குடிக்கவும். பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட குடலில் குடியிருக்கும் புழுக்களும் ,நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்ப்படியிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். இரத்தக்குழாயில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.
முளைக்கட்டிய பயிறு சலட்
- முளைக்கட்டிய பச்சைப்பயிறு -50 கிராம்
- முளைக்கட்டிய கொண்டைக்கடலை - 50 கிராம்
- சிறிதாக அரிந்த வெங்காயம் - 25 கிராம்
- சிறிதாக அரிந்த தக்காளி - 50 கிராம்
- தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
- எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
பழக்கலவை(சாலட்)
- விதையில்லாத திராட்சை - 50 கிராம்
- அன்னாச்சிப்பழத்துண்டு - 50 கிராம்
- விதைநீக்கிய ஆரஞ்சுகலவை - 50 கிராம்
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- கேரட் துருவல் - 50 கிராம்
- இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, இதில்
- புதினா அரைத்த விழுது - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி அரைத்த விழுது - 1 தேக்கரண்டி
- தயிர் - 1 கப்
- உப்பு தேவையான அளவு
- வெள்ளை மிளகுதூள் தேவையான அளவு
வெள்ளரி - பூசணி இயற்கை பானம்
- வெள்ளரித்துண்டுகள் - 100 கிராம்
- வெண்பூசணித் துண்டுகள் - 100 கிராம்
- வெள்ளை மிளகு - 10 கிராம்
- ஏலரிசி - 10 கிராம்
- எலுமிச்சை சாறு - 50 மிலி
- தேன் - 25மிலி

Social Plugin