Posts

Benefits of amla and healthy amla juice recipe: சிறு நெல்லிக்காயில் எண்ணிலடங்கா நன்மைகள்!...

Image
  amla:நெல்லிக்காய்,  விலை மலிவாக விற்கப்படுவதால் இந்தியாவில்  அதிகம்  சாப்பிடுகின்றனர். இது பல்வேறு நன்மைகளை அளிக்க வல்லது. மேலும் இதனை உணவாகவும் மருத்துவமாகவும் பயன்படுகிறது. நெல்லிக்காயின்  குளிர்ச்சி மற்றும் காரம் நிறைந்த தன்மை உடலுக்கு பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயின் முக்கிய தன்மை அதில்  மிக அதிகமாக  வைட்டமின் சி  அளவு இருப்பதுதான். இது உடலில் எதிர்ப்ப சக்தியை வலுப்படுத்துவதுடன், தோல், செரிமானம் மற்றும் இரத்தச் சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய், சிறிய பச்சை கனி என்றாலும், அதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பல ஊட்டச்சத்துகள், நமது உடல், தோல், முடி ஆகியவற்றை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். இந்தியாவின் ஆயுர்வேதம், சித்தம் போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை திடமாக வைத்திருக்கவும், மன நிம்மதியை தரவும் உதவுகிறது.   டிடாக்ஸி(Detoxification): பழங்களிலேயே ந...

BH Boss Tamil(Beauty/Health)

Image
  BH Boss Tamil - Beauty & Health Care Tips in Tamil | உடலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தைப்  பாதுகாக்க BH Boss Tamil-யை வாசித்துப் பயன்பெறுங்கள். என்றும் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியாக வாழலாம். அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த பயனுள்ள தகவல்களை காண கீழே குறிப்பிட்டுள்ள லிங்க்-யை கிளிக் செய்து பாருங்கள்.                    

Benefits Of Blue Pea Flower:சங்குப்பூவில் இத்தனை பயன்கள் கொட்டி கிடக்கிறதா? இவ்வளவுநாள் இது தெரியாம போச்சே!...

Image
  சங்குப்பூ (Blue Pea Flower / Butterfly Pea / Clitoria ternatea) Blue Pea Flower Benefits in Tamil : பெரும்பாலும் சங்குப்பூ காடுகளில் வளர்வதால்  மக்கள் சங்குப்பூவை பயன்படுத்துவதில்லை. காடுகளில் வீணாக கிடக்கின்றனர். இப்பூவின் பயன்களை பற்றி தெரிந்தால் இதனை வீணாக்கமாட்டீர்கள்.  செலவே இல்லாமல் எளிதில் கிடைக்கும் சங்குப்பூ அழகு மற்றும் ஆரோக்கியப் பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றனர். சங்குப்பூவை சாப்பிடுவதால் மூளை செயல்பாட்டின் திறன் அதிகரிக்கிறது. சங்குப்பூ டீ குடிப்பது உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை(Immunity) அதிகரிக்கிறது. தோல் மற்றும் முடி நலத்துக்கும் இப்பூ பெரிதும் பயனளிக்கிறது.  சங்குப்பூவின் நன்மைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம். இயற்கையின்  அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படும் சங்குப்பூவின்( Blue Pea Flower / Butterfly Pea / Clitoria ternatea ) கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  முகத் துளைகளை (Face Pores) சுருக்கும்: சங்குப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமட்டரி முகத்தில் இருக்கும் விரிவடைந்த துளைகளை (pores) சு...

Young Age to Old Age Maintaining youthfulness:டீனேஜ் முதல் முதிர்வு வயதுவரை இளமையை தக்கவைக்க இதை மட்டும் செய்தால் போதும்!...

Image
Self-care routine : இளமையாக இருக்கும் போதே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பாதி வயது கடந்த போது அதனுடைய சுயரூபத்தை  காட்ட ஆரம்பிக்கும்.இயற்கையான உணவு முறை, இயற்கையான சரும பராமரிப்பு, உடற்பயிற்சி,நடைப்பயிற்சி மற்றும் முச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் தோலை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளலாம். தோலை மட்டும் இல்லாமல் உடலின் உட்புறமும் பாதுகாப்பாக இருக்கும். சருமம் நம் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. டீன் ஏஜில் ஒரு மாதிரியும், அதைக் கடந்தது வேறு மாதிரியும் நடுத்தர வயதில் வேறு மாதிரியும் இருக்கும். அந்தந்த வயதிற்கேற்ப சருமத்தை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.  சருமத்தை இளம் வயது முதல் முதிர்வு வயது வரை பராமரிக்கும் வழிமுறைகளை கீழே விரிவாகப் பார்க்கலாம். டீன் ஏஜில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறை: காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் முகத்தை சுத்தமாகக் கழுவவும்.சூரிய கதிரின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாக்க  பகல் வேளைகளில் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். சருமத்திற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பேஸ்பேக் உபயோகிப்பது நல்லது.கடலை மாவு, ப...

Narai Mudi Karumaiyaga Tips in Tamil:நரைமுடி பிரச்சனைக்கு இதை மட்டும் பண்ணுங்க!...

Image
  Permanent White Hair Solution : இளநரை (அதாவது முடி வெண்மை ஆகத் தொடங்குவது) இளம்வயதிலேயே அனைவர்க்கும் வந்துவிடுகிறது.இந்நிலை எதனால் வருகிறது என்று தெரியுமா? மரபு, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்க முடியாது என்றாலும், சில வீட்டு முறை வைத்தியங்கள் மூலம் முடி கருமையாகும் தன்மையை பேணவும், புதிய இளநரை வருவதை தாமதப்படுத்தவும் முடியும். கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு முறை வைத்தியத்தை எல்லோருமே பயன்படுத்தலாம். இது தலைமுடி ஆரோக்கியமாக  முடி வளர்ச்சிக்கு எளிய டிப்ஸ்(Hair Growth) இருக்க உதவி செய்யும். இளநரை பாதித்தவர்களுக்கு இதனை தொடர்ந்து செய்யும் போது கண்டிப்பாக பாதிப்பு குறையும்.(முக்கியம்:தொடர்ந்து பயன்படுத்துதல்) நீர்ச்சத்து நிறைந்த பழக்கங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள்: தர்பூசணிப் பழம் - 91%தண்ணீர்  தக்காளி - 94%தண்ணீர்  ஸ்ட்ராவ்பெர்ரி - 91%தண்ணீர்  கிர்னிப் பழம் - 90%தண்ணீர்  காய்கறிகள்:  வெள்ளரிக்காய் - 96% தண்ணீர்  முட்டைகோஸ் - 96% தண்ணீர்  முருங்கைக்காய் - 95% தண்ண...

Aloe Vera:கற்றாழையை பற்றிய சில முக்கியமான தகவல்கள்...கட்டாயம் பார்க்கவும்!...

Image
கற்றாழை(Aloe Vera) Aloe Vera Benefits in Tamil : ஆலிவேரா செடி மருத்துவ குணமுடைய சிறந்த செடியாகும். இதன் இலைகளில் உள்ள ஜெல் பல விதமான ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளை தரக்கூடியது. தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், பிம்பிள்ஸ்  மற்றும் சிரங்குகளை குறைக்கவும் ஆலிவேரா தண்டு பெரிதும் உதவியாக இருக்கிறது. சூரியகதிர்விற்றால்  ஏற்படும் வெப்பத்தை தணிக்கவும்,உடலில் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும் சிறந்ததாக இருக்கிறது.மேலும், தலை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், முடி உதிர்தலையும் தடுக்கவும் செய்கிறது. குறிப்பாக ஆலிவேராச்  சாறு செரிமானத்தை மேம்படுத்தி குடலை சுத்தம் செய்யவதுடன் உடலில் உள்ள அழற்சியை குறைக்கும் இயற்கை மருந்தாகவும் செயல்படுகிறது.   காலை நேரத்தில் கற்றாழையை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் காலையில் எழுந்ததும் கற்றாழையில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.இது கொழுப்பு மற்றும் கலோரியை எரிப்பதில் சிறந்தது.  உடலினுள் ஏற்படும் வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும். குடல் மற்றும் கல்லீரலில் நச்சுக்களை நீக்குவது மட...

Dark Circle Removal: ஒரு வாரம் மட்டும் இதை செய்துப் பாருங்க...கருவளையம் காணாமல் போய்விடும்!...

Image
  Dark-Circle Removal Pack : உலகத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் என்ற இருபாலருக்கும் தன்னுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனை கெடுப்பதற்காகவே முகத்தில் கண்ணுக்கு கீழ் வருவதுதான் இந்த கருவளையம். பொதுவாக இந்த கருவளையம் கருப்புத்தன்மையோ, ஊதா நிறத்தையோ அல்லது பழுப்பு நிறத்தையோ கொண்ட வட்டமாக தோன்றும் தோலில் ஏற்படும் மாற்றமாகும். இந்த பிரச்சனை அனைத்து வயதினருக்கும் ஏற்படும். இப்பிரச்சனை பெரியதாக இல்லாவிட்டாலும்,  முக அழகை பாதிப்பதாலும் , சோர்வான தோற்றத்தை தருவதாலும் பலர் இதனை குறைக்க விரும்புகிறார்கள் .சரியான பராமரிப்பு, இயற்கையான உணவு முறை, சரியான பழக்கவழக்கங்கள் மூலம் கருவளையங்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும். ஆதலால்,இதை பொருட்படுத்திச் சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது அவசியமாகுகிறது. கருவளையம் எதனால் ஏற்படுகிறது என்பதை கீழே விரிவாகப் பார்க்கலாம். உறக்க குறைபாடு(sleep disorder): உறக்கமின்மை மூளையின் ஓய்வின்மையை வளர்த்துத் தூக்க குறைபாடை ஏற்படச் செய்யும்.இதனால் தோலில் உள்ள மெலனின் உற்பத்தி அதிகரித்து கருப்புத்தன்மை உருவாகுகிறது. உறங்காத நேரங்களில்...