Amla: சிறு நெல்லிக்காயில் எண்ணிலடங்கா நன்மைகள்!...

 



View This Image




Benefits of amla and Healthy amla juice:நெல்லிக்காய்,  விலை மலிவாக விற்கப்படுவதால் இந்தியாவில்  அதிகம்  சாப்பிடுகின்றனர். இது பல்வேறு நன்மைகளை அளிக்க வல்லது. மேலும் இதனை உணவாகவும் மருத்துவமாகவும் பயன்படுகிறது. நெல்லிக்காயின்  குளிர்ச்சி மற்றும் காரம் நிறைந்த தன்மை உடலுக்கு பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயின் முக்கிய தன்மை அதில்  மிக அதிகமாக  வைட்டமின் சி  அளவு இருப்பதுதான். இது உடலில் எதிர்ப்ப சக்தியை வலுப்படுத்துவதுடன், தோல், செரிமானம் மற்றும் இரத்தச் சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

நெல்லிக்காய், சிறிய பச்சை கனி என்றாலும், அதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் பல ஊட்டச்சத்துகள், நமது உடல், தோல், முடி ஆகியவற்றை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கும். இந்தியாவின் ஆயுர்வேதம், சித்தம் போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை திடமாக வைத்திருக்கவும், மன நிம்மதியை தரவும் உதவுகிறது. 

 டிடாக்ஸி(Detoxification):

பழங்களிலேயே நெல்லிக்காய் உடலை இயற்கையாக டிடாக்ஸ் செய்யும் (நச்சுகளை வெளியேற்றும்)  சிறந்த பழமாக இருப்பதால் இதில் அதிக அளவு  இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி,உடலில் சேரும் விஷச்சத்துக்களை (toxins) தனிமைப்படுத்தி அவற்றை வெளியேற்ற உடலை உதவியாக்குகின்றன. உடலில் உண்டாகும் நச்சுகளை துடைத்தெடுக்க கல்லீரல் (liver) மற்றும் சிறுநீரகங்களை (kidneys) ஊக்குவிக்கிறது. மேலும் ரத்தத்தை தூய்மைப்படுத்தி, திசுக்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.தினசரி நெல்லிக்காயை, சாறு அல்லது தூள் வடிவில் எடுத்துக்கொள்வது, உடலை முழுமையாக டிடாக்ஸ் செய்து நீண்ட காலம்  ஆரோக்கியமாக வாழ உதவியாக இருக்கும்.

சருமம்  மற்றும் தலை முடிக்கு சிறந்தது:

 நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்சத்து இருப்பதால்  தோலை உள்வழியே ஊட்டம் அளித்து தோலை  இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கருப்பு புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் சோர்வை குறைத்து, சருமம் பளிச்சிடும்  தன்மையை பெற்றதாக மாற்றுகிறது.அதே சமயம் நெல்லிக்காய் தலை முடிக்கு வலிமை கொடுத்து, முடி உதிர்வை குறைத்து, புதிய முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடியின் வேர்களை உறுதியாக வைத்துக் கொண்டு அதற்கான ஊட்டச்சத்துக்களை கொடுத்து, காலம் தாழ்த்திய முறையில் தலை முடி விரைவில் பழுப்பு அல்லது வெள்ளை நிறம் ஆகாமல் பாதுகாக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம், நீண்ட காலம் உங்கள் தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கிறது.

எலும்புகளின் வலிமையை வலுவாக்கும்:

நெல்லிக்காயில் அதிக அளவு  வைட்டமின் சி , கால்சியம், பாஸ்பரஸ், அயரன் போன்ற  சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்புகளின் முக்கியமானதான கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, அவற்றை உறுதியானதாக மாற்றுகிறது. இதனால் எலும்புகள் தளர்வதையும் உடனடியாக முறிவதையும் தவிர்க்க முடியும். அதேசமயம் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மைகள் எலும்புகளின் வயதுசெல்வத்தைக் குறைத்து அவற்றை நீண்ட காலம் வலிமையாக வைத்திருக்க உதவுகின்றனர்.குறிப்பாக பெண்களில் வயது முதிர்ந்த பிறகு ஏற்படும் எலும்புக் குறைபாட்டை (osteoporosis) தடுக்க, நெல்லிக்காய்  சிறந்த இயற்கை பாதுகாவலராக இருக்கிறது. 

கண் பாதிப்பை குறைக்கும்:

நெல்லிக்காயில் இருக்கும்  வைட்டமின் சி மற்றும்  ஆன்டி ஆக்ஸிடென்ட்  நிறைந்து இருப்பதால்  கண்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதை மேம்படுத்துகிறது. அதேபோல் கண்களின் ரத்தசுழற்சியை மேம்படுத்தி, கண் சோர்வு, வறட்சியை குறைத்து, ஒளிப்பார்வையை தெளிவாக்கும் திறனும் நெல்லிக்காய்க்கு இருக்கிறது. காலம் கடந்து ஏற்படும் வயது முதிர்ந்த நோய்கள் கண் மோட்டம் (cataract), கண் செம்மை மற்றும் கண்ணீர்வராமை போன்ற பிரச்சனைகளை  தடுக்கும் சக்தியும்  நெல்லிக்காயுக்கு உள்ளது. தினசரி நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம் கண்களின் சக்தி நீடித்து, நீண்டகாலம் கண் பார்வை தெளிவாக இருக்க உதவுகிறது.

உயிரணு பாதுகாப்பு(Immunity Booster):

நெல்லிக்காய் மிகவும் சக்திவாய்ந்த உயிரணு பாதுகாப்பாக இருக்கிறது (immunity booster). இதில் அதிக அளவு வைட்டமின் சி  இருப்பதால், உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) செயல்பாட்டை ஊக்குவித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதனால் வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்க முடியாமல் பாதுகாக்கப்படுகிறது.நெல்லிக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் செல்களின் சேதத்தை தடுத்து, உடலை நோய்கள் இல்லாமல்  ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. மேலும், சளி, காய்ச்சல் போன்ற வைரஸ்தொற்றுகளுக்கு எதிராக போராடும் சக்தியையும் நெல்லிக்காய் அதிகரிக்க செய்கிறது. தினசரி நெல்லிக்காய் சாறு அல்லது பச்சை நெல்லிக்காய் சாப்பிடுவது மூலம் உடல் உயிரணு பாதுகாப்பு(Immunity Booster) இயற்கையாக வலுப்பெற்று, நீண்டகாலம் ஆரோக்கியமாக நோயில்லாமல் வாழ உதவுகிறது.


நெல்லிக்காயை பழமாக சாப்பிடுவதற்கு சில பேருக்கு பிடிக்காது. அதனால் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிப்பவர்கள் பல பேர் இருக்கின்றனர். ஏனென்றால் இந்த பழம் கடுமையாக புளிப்பும், சிறிது கசப்பும், சிறிது இனிப்பும் சேர்ந்து இருப்பதால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும். உங்கள் சிரமத்தை போக்குவதற்கு அருமையான நெல்லிக்காய் ஜூஸ் ரெசிபி உள்ளது. அந்த ஜூஸ் ரெசிபி பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.


நெல்லிக்காய் ஜூஸ்(Amla Juice) 

தேவையானப் பொருட்கள்:

  • நெல்லிக்காய் - 2
  • வெள்ளரிக்காய் - 1(சிறியது)
  • இஞ்சி - சிரியதுண்டு 
  • கொத்தமல்லி - தேவையான அளவு 
  • உப்பு - சிறிதளவு 


நெல்லிக்காய், வெள்ளரிக்காய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்ததை ஒரு குவளையில் ஊற்றி  பின் அதனுடன் உப்பு சேர்த்து கொண்டு  குடிங்கள். மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். என்றும் இளமையுடனும் உடல் நலனுடனும் வாழலாம்.