Daily Human Habits: பயணிப்போம் நல்ல வழியில்..உங்கள் மூளையை பழக்கப்படுத்தலாமா!...



View This Image


Ultimate Guide to Learn New Habits and Break Bad Habits:குழந்தைகளுக்கு சிறு பருவத்திலே இருந்து நல்ல பழக்க வழக்கங்களை  உருவாக்கி கொடுப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலிமையான அடித்தளமாக அமையும். மனிதனின் வாழ்வில் கெட்ட பழக்கவழக்கங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அவை நல்லதாயிருத்தல் மிகவும் அவசியம்.

கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் (Good Habits): 

  1. காலையில் 5 மணிக்கு எழுந்து விடுங்கள். எழுந்ததும், குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும்.
  2. கடவுளை வணங்க வேண்டும்.
  3. பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
  4. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பழகுங்கள். 
  5. காலை மற்றும் இரவு என்று இரு முறை மேல் குளியல் குளிக்க வேண்டும். 
  6. தினமும் பல் மற்றும் வாயைப்  காலை மற்றும் இரவு என்று இரு  முறை  துலக்கவும்.
  7. தோல் பராமரிக்க இயற்கையான முகக்கவசம், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
  8. முடிக்கு வாரம் 2 முறை எண்ணெய் தடவுங்கள். 
  9. தினசரி 7–8 மணி நேரம் தூக்கம் பெறவும்.
  10. தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் அவசியம்  குடிக்கவும்.
  11. பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ளவும்.
  12. நேரத்திற்கு உணவு சாப்பிடுதல் அவசியம். நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் உடல் பருமன் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,
  13. மன அழுத்தம் குறைக்க தியானம், யோகா, மெதுவான மூச்சு பயிற்சி செய்யவும்.
  14. தினமும் வாசிப்பு, கற்றல், நன்றி கூறும் பழக்கங்கள் நம் எண்ணங்களையும் நேர்மறையாக மாற்றும். 
  15. நம்மோடு பேச வருபவர்களிடம் நல்லவிதமாக பேசவும்(எதிரியாக இருந்தாலும் பிடிக்காதவர்களாக இருந்தாலும் மரியாதையோடு பேசுவது)
  16. தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ உதவி கேட்டால் நம்மால் முடிந்த உதவிகளை செய்யவும்.
  17. ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு உதவி செய்யவும்.
  18. நல்ல வார்த்தைகள் பேசுதல்.
  19. சண்டைகள் மற்றும் ஒருவர்க்குஒருவர் மனஸ்தாபம் ஏற்படும்போது தவறுகள் எங்கு நடந்திருக்கிறது என்று ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
  20. குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ச்சியை  பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கவழக்கங்கள் (Bad Habits):

  1. நாள்தோறும் உடல் சுத்தம் இல்லாமல் இருப்பது நோய்களுக்கு வழிவகுக்கும்.
  2. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உடல் பராமரிப்புக்கு கேடு.
  3. தண்ணீர் குடிக்காமல் உடலை வாட்டுவது தோல் உலர்ச்சி, சோர்வு போன்றவற்றை உண்டாக்கும்.
  4. முக்கியமான உணவுகளான காலை உணவை தவிர்ப்பதை  தவிர்க்க வேண்டும்.
  5. அதிக எண்ணெய், உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  6. தோல் மற்றும் முடிக்கு அதிகமான கெமிக்கல் பொருட்கள் (bleachhair dye) பயன்படுத்த வேண்டாம்.
  7. புகையிலைசிகரெட்மது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
  8. கெட்ட வார்த்தைகள்  பேசுதல்.
  9. பெற்றோரை மதிக்காமல் ஊர் சுற்றி திரிதல்.
  10. தொலைக்காட்சி மற்றும் தொலைபேசியில் அதிக நேரம் செலவிடுதல்.
  11. வயதில் முதியவர்களிடம்  மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளுதல்.
  12. சோம்பேறித்தனம் கொள்தல்.
  13. தேவையில்லாத காரியங்களுக்கு நேரத்தை வீணாக்குவது கெடு.
  14. மனதை கெடுக்கும் விளையாட்டுக்கு அடிமையாதல்.
  15. ஒருவரை நம்பி ஏமாற்றுதல்.
  16. வாகனத்தில் செல்லும் போது வரம்பு மீறி செல்தல்.
  17. அதிகமாக கோபம் கொள்தல்.
  18. தூங்கும் நேரத்தை புறக்கணித்தல் அல்லது குறைவாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு.
  19. மற்றவர்களின் உழைப்பை திருடி அதை அனுபவித்தல்.
  20. தன் மீது தவறு இருந்தும் மற்றவர்கள் மீது பழி போடுதல். பேராசை, பொறாமைக் கொள்ளுதல்.