Menstrual Disorders: இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்க-வழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகுகிறது.
பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவர்க்கும் உள்ள தனிச்சிறப்பாகும்.தன் மகள், 'பூப்பெய்தவில்லையே ' என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு உரியது.
பூப்பெய்தும் பெண்களுக்குத் தனியாக உணவுகளைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு ஊட்டமான உணவுகளைக் கொடுத்து நல் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு, மாதாந்திர சுழற்சிப் படி, மாதவிடாய்த் தொடர்ந்து ஏற்பட, வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் போற்றலுக்குரியவர்களே!...
குமரிப் பருவமுற்ற மங்கையருக்கு மாதவிடையானது 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிவந்து, தொடர்ந்து சுழற்சி கொண்டிருக்கும். மாதாந்திரச் சுழற்சி திடீரென நின்று விடுவதையே, மாதவிலக்கற்ற நிலை(Secondary menorrhoea)என்கிறோம்.
பெண்கள் கருத்தரிக்கின்ற வேளையில் மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும். ஆனால் கற்பமில்லாமல் மாதவிடாய் நின்று விடுவதே நோய்க்குறைபாடாகும்.
நோயுற்ற சில பெண்களுக்கு மிகவும் குறைந்த அளவில் மாதவிடாய் வெளியேறும். இன்னும் சிலருக்குச் சில துளிகள் மட்டுமே வெளியேறும். வேறுசிலருக்கோ, மாதவிடாயில் ஒரு துளிக்கூட உதிரப்போக்கு இராது. இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் அதிக அளவில் வெளியேறும். ஐந்து முதல் பத்து நாட்கள் கூட உதிரம் படும். சில பெண்களின் மாதாந்திரச் சுழற்சி(Menstrual Cycle)மாதம் இருமுறை கூட இருப்பதுண்டு.
மாதவிடாய் அதிக உதிரப்போக்கு உடைய பெண்களுக்குக் கர்ப்பைப்பை சரியாக வளர்ச்சியடையாமலோ, கருப்பை முனையில் நார்க்கழலைக் கட்டிகள்(Submucos Fibroid)வளர்ந்தோ அல்லது கருப்பையில் புற்றுநோய்(Utrine Cancer)பாதிப்போ இருக்கக்கூடும்.
மாதவிடாய் வராமல் போக இதுதான் காரணம்:
- நாளமில்லா சுரப்பிகள் பாதிப்படைவதால், மாதவிலக்கு நின்றுவிடலாம்.
- கருப்பைப்பை கோளாறுகளினால் மாதவிலக்கு நின்று போகலாம்.
- கருமுட்டைகள் பாதிப்படைந்து, மாதவிடாய் வராமல் இருக்கலாம்.
- தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, உடல் ஊட்டம் குறைந்து விடுவதாலும், அடிக்கடி பட்டினி கிடத்தலாலும் மாதவிடாய் வராமல் இருக்கலாம்.
- மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைவு, உடற்பயிற்சி குறைவு, தூக்கமின்மை, அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்றவைகளாலும் காரணமாகலாம்.
இன்றைய உணவு முறைப் பழக்கங்கள், மன அழுத்தம் மிகுதியாகிப் போன வாழ்வியல் சூழல்,உணவு முறைகளில் விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் , பெண்கள் பெரும்பாலும் இக்குறைபாட்டிக்கு உள்ளாகுகின்றனர்.ஒரு முறை கூட மாதவிடாய் வரவில்லை என்றால், அதற்குரிய மருத்துவரை சந்தித்து கலந்து ஆலோசிப்பது மிக மிக முக்கியம். இதனை சரி செய்வது கடினம். ஆனால் முடிந்தவரை இயற்கை வைத்தியத்தை செய்து பாருங்கள். இயற்கை வைத்தியத்தை கடைபிடித்தால் ஒருவேளை நடப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம். மாதவிடாய் தாமதமாக வருபவர்களும் இந்த இயற்கை முறை பொருந்தும்.
மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய இயற்கை முறை வைத்தியம்:
இஞ்சி கஷாயம்:
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு துருவிய இஞ்சியை போட்டு காய்ச்சி குடிக்கவும்.தினமும் ஒரு முறை என்று வாரத்திற்கு 3 முறை குடிப்பது இரத்த ஓட்டத்தை தூண்டி, மாதவிடாய் வர உதவும்.

Social Plugin