Posts

விரதம்:பட்டினி மருத்துவம்

Image
  Health Care: அதிகாலையில் எழும் நல்ல பழக்கத்தைப் போலவே, மூன்று வேளை உண்பதைத் தவிர்ப்பது என்ற பட்டினி மருத்துவம் மூலம் மனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளது. நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் இருந்து நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப் போல, அந்த உணவுப் பொருட்களின் மிச்சத்தைத் திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்ற சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததிலிருந்து ஒரு நொடி கூடி ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும். இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். அதன் இயக்கங்களுக்கு ஓரளவிற்கு ஒய்வு தர வேண்டும். நாக்கு ருசிக்கு மட்டுமே முன்னுரிமை தந்து, இவை உடல் நலத்திற்குக் கேடானவை, கழிவு நிறைந்தவை எனத் தெரிந்தே பல உணவுகளை திணித்து குடல் இயக்கத்திற்கு கேடு செய்கிறோம். நச்சு நிறைந்த உணவை உண்பதால் உடல் பாதிப்படைகிறது. நம் வீட்டில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தூர்நாற்றம் ஏற்படுவது போல குடல் கெட்டு, அழுகி, மலம் தங்கி நாற்றமெடுக்கிறது. இதைச் சரிசெய்ய விரதம், பட்டினி போடு...

Food is Medicine:(Siddha)சித்தர் நெறியில் உணவே மருந்து | கண்டிப்பா பாருங்க!...

Image
Siddha Care :இதய நோய், அண்மைக்கால மருத்துவத்திற்குக் கட்டுப்படுத்த இயலாத ஒரு நோயாக சவால் விடுகிறது. இந்நோய்க்கு 200க்கும் மேலான காரணங்களும், 12 விதமான ஆபத்துக்களும் சொல்லப்படுகின்றன. நோய் அறிகுறிகளை வைத்து, மருத்துவ வல்லுநர்கள் இதய நோயைக் கண்டுபிடிக்கவும், நோயின் தீவிர நிலை மற்றும் அதன் விளைவுகளைத் தீர்மானிக்கவும் செய்கிறார்கள். பூரிதக் கொழுப்பும், அதிகபட்சக் கொழுப்பும் இதய நோய்க்குக் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும், தொழில் மயமான வளர்ந்த நாடுகளில் கூட, உணவுப் பழக்க வழக்கங்கள் இதய நோய்க்கு எப்படிக் காரணங்கள் ஆகுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றனர். இது மிகப் பெரும் அவலம். இதய நோய்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஆக்சிஜன் மயமான கொழுப்பு உணவில் அதிகமாவதும், பாலிகோசனால் உணவில் இல்லாததுமே அவ்விரண்டு காரணங்கள்.   முதலில் செயற்கைச் சர்க்கரை(White Sugar)பயன்பாடு குறித்தும் இயற்கையான கரும்புச் சாற்றில் உள்ள, ஆரோக்கியத்திற்கு உதவுகிற மூலக்கூறுகள் எவ்விதம் இழக்கப்படுகின்றன என்பது குறித்தும் நாம் ஆராயலாம். அதாவது, பாலிகோசனால் இல்லாதது பற்றி யோசிப்போம்...

Detox Drink:நச்சு நீக்கும் பானம் தயாரிப்பது எப்படி?

Image
  நச்சு நீக்கும் பானம் (Detox Drink) Detox drink : உடலுக்குள் தேங்கி இருக்கும்  நச்சு சேர்க்கைகளை (toxins) வெளியேற்றும் இயற்கையான பானம் தான் நச்சு நீக்கும் பானம் (Detox Drink). நமது உணவுக் பழக்கங்கள், மாசுபட்ட சூழல், மருந்துகள், மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலுக்குள் நச்சுகள் படிவடைகின்றன. இந்த நச்சுகள் நீக்கப்படாமல் போனால், தோல் பிரச்சனை, செரிமான கோளாறு, சோர்வு, எடை கூடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளனர். நச்சு நீக்கும் பானம்(Detox Drinks)  நச்சுகளை வெளியேற்ற கரளி, சிறுநீரகம், குடல் போன்ற உறுப்புகளை தூண்டி, உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.  Simple Weight Loss Tips  குறிப்பாக, இந்த பானங்கள் உடலுக்கு தேவையான திரவச் சேர்க்கைகளை வழங்கி, ஹைட்ரேஷனை அதிகரிக்கும். நச்சு நீக்கும் பானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம். இஞ்சி(Ginger): இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜரோல் (Gingerol) என்ற உயிர்ச்சேர்மம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவையாகும். இது உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்றுவதுடன், கர...

Skin Diseases: தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிகள்!...

Image
  Skin Disease :தோல் வியாதி வருவதற்குக் காரணம் மலச்சிக்கலும், மலக்குடலில் உண்டாகும் பூச்சிகளுமே ஆகும்.வைட்டமின் B உள்ள கஞ்சி, அரிசி களைந்த கழுநீர், கீரைகள், கசப்புள்ள காய்கள் இவற்றை சாப்பிடாமல் இருப்பதே காரணம். இவர்கள்  எப்பொழுதுமே சோப்புப் போட்டுக் குளிக்கக் கூடாது. சோப்பு, தோலில் உள்ள எண்ணெய்ப் பசையை எடுத்துவிடும். சுரப்பிகள் நன்கு வேலை செய்யாமல் இருப்பதும் ஒரு காரணம். தோல் வியாதி உள்ளவர்களுக்கு அவசர, அவசரமாகச் சாப்பிடுவதும், பானங்களை அவசரமாகக் குடிப்பதும் பழக்கம். இந்த வியாதி உள்ளவர்கள், உண்ணும் உணவை நன்றாக மென்று சுவைத்து, உமிழ்நீர் சுரந்தபின் 'நீர் அருந்துவது போல' உணவைக் குடிக்க வேண்டும். தண்ணீரை உணவு உண்பதுபோல் மெதுவாகக் குடிக்கவும். தோல் வியாதி உள்ளவர்களுக்கு அடிக்கடி காது அரிப்பு ஏற்படும். மலக்குடலில் பூச்சியிருந்தால் அந்தக் காது அரிப்பு வரும். தோல்படை  கருமேகம்(தோல் கருமை) சோரியாசிஸ்(மீன்செதில்) கொப்புளமாக உடல் முழுவதும் இருக்கும், உடல் அரிப்பு,சொறிந்தால் தண்ணீராக வரும், உடல் முழுவதும் சிறு வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வரும். மேற்கண்ட ஆறு வியாதிகளும் கீழ்க்கண்ட சிகி...

Natural foods that protect the heart:இதயம் காக்கும் இயற்கை உணவுகள்!...

Image
Health Care Tips in Tamil :மானுட உடலின் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்புகளின் முன்னோடியாய் இதயத்தைக் குறிப்பிடலாம். தாயின் கருப்பையிலேயே இதயத்தின் வேலை ஆரம்பமாகி விடுகிறது. இரவு, பகல் பாராது இடைவிடாது மனிதனின் ஆயுட்கா லம் முழுவதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இனிய தோழன்தான் இந்த இதயம். இதன் துடிப்பு நின்றுவிட்டால், நாடித்துடிப்பு ஏற்படவில்லை என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டதாய் அர்த்தம்.  நேற்று நானும் அவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவு ஒன்றாகச் சாப்பிட்டோம். லேசாய் நெஞ்சு வலிப்பதாய் சொன்னார். மருத்துவமனை செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது.  இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகளை நாம் கண்கூடாய் கண்டும் கேட்டும் வருகிறோம். இப்பொழுது இதயம் காக்கும் இயற்கை உணவுகளைப் பற்றி அறிவோம். இதயத்தின் செயல்பாடுகள் என்ன? 'இதயம்' என்பது உடலின் அனைத்து உறுப்புக்களும் ஒழுங்கே இயங்க உதவி புரியும் உற்ற நண்பன். அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான இரத்தத்தை இரத்த நாளங்கள் வழியாகத் தொடர்ச்சியாக இறைந்து விடும் ஒரு அற்புதக் கருவி.  ஒவ்வொருவரின் இறுக  மூடிய கையளவே கொண்ட இதயத்தில் (1) இதய வ...

Knee Pain:மூட்டு வலினால ரொம்ப கஷ்டப்படுறீங்களா???இந்த பதிவு உங்களுக்கு தான்!...

Image
Health Care Tips :வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் பாதிக்கிற இந்த முதுகுவலி எதிர்பாராத நேரத்தில் வருகிற திடீர் விருந்தாளி மாதிரி எப்போது வேண்டுமானாலும் வரும். இதனை சரியான முறையில் கையாண்டால் முதுகு வலியை துரத்தி விட்டு விடலாம்.கீழே அதற்க்கான தெளிவான விளக்கங்களை பார்க்கலாம். வாருங்கள்!... வலிக்கான காரணங்கள்: முதல் காரணம் உட்கார்கிற, நிற்கிற நிலை, எப்போதுமே முதுகு வளையக் கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய வேலை என்றால் உங்கள் இருக்கை. முதுகுக்கு சப்போட்டாக இருக்க வேண்டும். அடி முதுகை ஒட்டினாற் போல ஒரு குஷன் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கொரு முறை ஓய்வு அவசியம்.  அடிக்கடி டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள்? அதுகூட முதுகு வலியை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? மன உளைச்சல் முதுகு மற்றும் கழுத்துத் தசைகளின் ஒருவிதப் பிடிப்பை உண்டாக்கி, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முதுகெலும்பு தசைகளில் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. விளைவு? லேசாக குனிந்தால் கூட உயிர் போகிற அளவுக்கு முதுகுவலி! தீர்வு என்ன? தியானம் செய்யுங்கள். யோகாவும் பலன் தரும். எடுத்த எடு...

Summer Time Best Fruits:வெயில் காலத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா?இந்த பழத்தை சாப்பிடுங்க...

Image
வெயில்காலம்  இயற்கையில் ஒரு மாற்றம் மட்டுமே. ஆனால் அதில் இருந்து நம்மை பாதுகாக்கும் முறைகள் எளிமையானவையாகவே இருக்கின்றன. காலச்சுழற்சி காரணமாக ஏற்படும் வெப்பநிலை உயர்வுகளுக்கு ஏற்ப  உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், பசுமைச் சூழலை அதிகரிக்க மரங்களை நடுதல் போன்ற முயற்சிகள், வெப்பத்தை குறைக்கும் வகையில் பெரும் பங்களிப்பை செய்யும். மிகவும் வெயிலாக இருக்கும் நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை), வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கலாம். அவசியமான வேலைக்காக வெளியே செல்லும்போது, தடையில்லா துணிகள், தொப்பி, கண்ணாடி, குடை போன்றவற்றை பயன்படுத்தி சூரிய ஒளியைத் தவிர்க்கலாம். வெயில் காலத்தில் (சமர் சீசனில்) முகத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தரக்கூடிய சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும் இந்த பருவத்தில், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அதிக தண்ணீர், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவை சருமத்தை உள்ளிருந்து பாதுகாக்கவும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இப்பொது ...

Skin Care: வயது ஆனாலும் அழகும் ஆரோக்கியமும் என்றும் உங்களை விட்டு போகாமல் இருக்க வேண்டுமா?இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!...

Image
Health and Beauty Care Tips in Tamil : அழகு வெறும் தோற்றமல்ல உடல், மனம், ஆன்மா ஆகிய  ஒட்டுமொத்தமும் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. இன்று பலரும் காஸ்மெட்டிக்ஸ், க்ரீம், செயற்கை சிகிச்சைகள் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இயற்கையான குறிப்பு முறைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் என்றும் இயற்கையான அழகை  இயற்கையிலும் அன்றாட பழக்கவழக்கங்களிலும் தான் கிடைக்கும். குறிப்பாக, இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் தோல் பிரகாசமாக, தலைமுடி சுறுசுறுப்பாக, உடல் ஆரோக்கியமாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும். இயற்கையான அழகை பெற வேண்டுமென்றால், நம் பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கடைபிடிப்பது மிக மிக அவசியம். உணவு, நீர், தூக்கம், மனநிலைகள், உடற்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றை சரிசெய்தாலே இயற்கையான அழகு தானாகவே உங்களுக்கு வந்து சேரும். அதற்காக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக கீழே  பார்க்கலாம். இவை உங்கள் வாழ்க்கை முறையை சிறிது சிறிதாக மாற்றி, உங்களுக்கே தெரியாமல் அழகையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். முகப் பராமரிப்பு: தினசரி சருமத்தை...

Cervical Cancer:பெண்களே!...கண்டிப்பாக பாருங்க.உங்களுக்கான பதிவுதான் இது

Image
கர்ப்பப்பை புற்றுநோய்  உலகளவில் புற்றுநோய் ஆண்களை விட பெண்களுக்குத்தான் வருகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்(WHO) இத்தகைய பெண்களுக்கு வரும் புற்று நோய்களில் அதிகமாக வருவது செர்விக்ஸ் கேன்சர்தான்.   அதென்ன செர்விக்ஸ் கேன்சர்? பெண்களின் கருப்பை நுழைவாசலில் வருகிற ஒரு ஆபத்துதான் செர்விக்ஸ் கேன்சர். பெண்களின் தொப்புகளுக்குச் சற்றே மேலிருக்கும் பெல்விஸ் பகுதியில்தான் இந்த உறுப்பு இருக்கிறது.  பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் எல்லாம் இந்த செர்விக்ஸில்தான் நடைந்தேறுகின்றன. ஆம். இனிமையான தாம்பத்ய உறவுக்குப் பின்னால் கர்ப்பமடைதல். அவ்வாறு கருவில் உருவான அவளின் இன்னோரு உயிர் வெளி உலகத்திற்கு வந்து உதிப்பதும் அந்த செர்விக்ஸ் வழியாகத்தான். இது மட்டும்மல்ல. மாதவிலக்கு வெளியேறும் வழியான வஜினாவையும், கருப்பையையும் இணைக்கும் பாலமாகவும் செர்விக்ஸ்தான் செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில்தான் இன்று ஏராளமான பெண்களுக்குப் புற்றுநோய் வருகிறது. செர்விக்ஸ் கேன்சர் வர காரணங்கள் என்ன? ஆண், பெண் இருவருமே சுத்தமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு எ...

Daily Juice: வாரத்தில் ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான சத்தான ஜூஸ் வகைகள்!...

Image
Fruit Juice : பெரும்பாலும் சந்தைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விலைமலிவாக கிடைக்கும். ஆனால் பல பேர் இதனை பொருட்டாக எண்ணாமல் வாங்காமல் இருக்கின்றனர். சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை விட்டு விட்டு துரித உணவுகளான பிட்சா,பர்கர், சன்விச், ரோல் போன்றவைகளுக்கு அடிமை ஆகுகிறோம். ஆசைக்காக எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதையே பழக்கமாகி கொள்வது உடலுக்கு நல்லது கிடையாது. இது உடல் பருமனை அதிகரிக்க செய்வது மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக சீர்குலைத்து விடும். ஆதலால், என்றும் ஆரோக்கியமாக இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். நாம் உயிர் வாழ  சாப்பாடு எவ்வளவு முக்கியமோ அதைப்போல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பழங்களும் காய்கறிகளும் மிகவும் முக்கியம்.  பழங்கள் மற்றும் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவதற்கு சில பேருக்கு பிடிக்காமல் இருக்கும். நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். சுவையாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ஜூஸ் எவ்வாறு செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். வாரத்தின் ஏழு நாட்களுக்கும் தேவையான ஜூஸ் ரெசிபி பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம். ஞா...

Face massage oil: முகம் வறண்டு பாலைவனம் போல் இருக்கிறதா? இந்த பேஸ் மசாஜ் ஆயில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி பாருங்க. அப்புறம் அசந்து போயிடுவீங்க...

Image
Home-made face massage oil : முகம் பொலிவுடனும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதற்க்கு காரணம் என்னவென்றால் கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போது நமக்குள் ஒருவித சந்தோஷம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும் ஏற்படும்.அதனால் அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை வெள்ளையாக்குவார்கள். முதல் சிகிச்சையிலே முகம் வெள்ளையாகிவிடும் என்பதெல்லாம் கிடையாது. தொடர்ந்து அழகு நிலையத்திற்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். சிகிச்சையின் முடிவில் முகம் வெள்ளையானாலும் அது இறுதிவரைக்கும் இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், முகம் மற்றும் உடலை வெள்ளையாக்கும் செயற்கை முறை முதலில் நல்ல பலன் கொடுத்தாலும் இறுதியில் பக்க விளைவை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இயற்கை சிகிச்சை முறை அப்படி அல்ல. என்றுமே அழகை அள்ளிக்கொடுப்பதிலும் நீடித்து நிலைக்க செய்வதில் சிறந்தது*இயற்கை குறிப்பு முறைகள் தான்*. முதலில்,முகத்தை அழகுபடுத்த பயன்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி பார்க்கலாம். கேரட்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டை சாப்பிட்டால்  சரும பிரச்சனைகள், முதுமை தோற...