வயது ஆனாலும் அழகும் ஆரோக்கியமும் என்றும் உங்களை விட்டு போகாமல் இருக்க வேண்டுமா?இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!...


View This Image



Health and Beauty Care Tips in Tamil:அழகு வெறும் தோற்றமல்ல உடல், மனம், ஆன்மா ஆகிய  ஒட்டுமொத்தமும் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. இன்று பலரும் காஸ்மெட்டிக்ஸ், க்ரீம், செயற்கை சிகிச்சைகள் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இயற்கையான குறிப்பு முறைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் என்றும் இயற்கையான அழகை  இயற்கையிலும் அன்றாட பழக்கவழக்கங்களிலும் தான் கிடைக்கும். குறிப்பாக, இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் தோல் பிரகாசமாக, தலைமுடி சுறுசுறுப்பாக, உடல் ஆரோக்கியமாகவும், மனம் அமைதியாகவும் இருக்கும்.

இயற்கையான அழகை பெற வேண்டுமென்றால், நம் பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கடைபிடிப்பது மிக மிக அவசியம். உணவு, நீர், தூக்கம், மனநிலைகள், உடற்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றை சரிசெய்தாலே இயற்கையான அழகு தானாகவே உங்களுக்கு வந்து சேரும்.

அதற்காக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக கீழே  பார்க்கலாம். இவை உங்கள் வாழ்க்கை முறையை சிறிது சிறிதாக மாற்றி, உங்களுக்கே தெரியாமல் அழகையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

முகப் பராமரிப்பு:

தினசரி சருமத்தை  சுத்தம் செய்யாமல் விடுவது:

நாள்தோறும் வெளியே செல்வதன் மூலம் தூசி, மாசு, எண்ணெய், மற்றும் நம் சருமத்தால் வெளியேறும் கழிவுப் பொருட்கள் முகத்தில் தேங்கி நிற்கின்றன. இவற்றைக் களைவதற்கான முதற்கட்ட நடவடிக்கை தான் முகம் சுத்தம் செய்தல். இதை தவிர்த்து விட்டால், ரோமக்குழாய்கள் அடைப்பு, பிம்பிள், கருப்புத் தழும்புகள், மற்றும் முகப்பரப்பு ஒளியற்ற தோற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவில் தூங்குவதற்கு முன் முகம் சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சருமம் தன்னைத் தானே சீர்படுத்தும். தினமும் முகத்தை சுத்தமாக வைத்தால் கிருமிகளில் இருந்து தோலை பாதுகாக்கலாம்.

பிம்பிள்களை கையால் அழுத்துவது:


பிம்பிள்கள் தோன்றும்போது அவற்றை கையால் அழுத்தும் பழக்கம், சருமத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதை செய்யும் போது உள்ளே இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியா மேல் தோலை விரிவாக தாக்கி, அழற்சி மற்றும் கூடுதல் பிம்பிள்களை உருவாக்கும். மேலும், இந்த செயல்முறை சருமத்தில் ஆழமான காயங்கள், கருப்புத் தழும்புகள் மற்றும் நிரந்தர தழும்புகள் (scars) தோன்றும் அபாயத்தையும் உருவாக்குகிறது. கைகள் முழுமையாக சுத்தமில்லாதபோது, கூடுதல் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். பிம்பிள்கள் வந்தால் அவற்றை இயற்கையாகவே  வாட விட வேண்டும் அல்லது  மருத்துவச் சிகிச்சைகளை பின்பற்ற வேண்டும். தவறான முறையில் கையாள்பது உங்கள் சரும அழகை நிரந்தரமாக பாதிக்கலாம்.பொறுப்போடு கையாள்வது மிகவும் அவசியம்.

மேக்கப்பை(Make-Up) நீக்காமல் இருப்பது:


முகத்தில் மேக்கப்பை நீக்காமல் தூங்குவது சரும அழகுக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது. மேக்கப்பில் உள்ள ரசாயனங்கள் மற்றும் பவுடர்கள், நீண்ட நேரம் சருமத்தில் தேங்கியிருப்பதால், ரோமகுழாய்களை அடைத்து விடும். இதன் விளைவாக பிம்பிள்கள், கருமை தழும்புகள் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகள் உருவாகும். மேலும், சருமம் சுவாசிக்க முடியாத நிலைக்குள் செல்லும் போது அதன் இயற்கையான ஒளியையும் இழக்கும். இவை சருமத்தை அழகற்ற தோற்றத்திற்கு மாற்றுகின்றன. அதனால், தினமும் இரவில் தூங்குவதற்கு முன்  மேக்கப் ரிமூவர் அல்லது பேஸ் வாஸ், சோப்பு பயன்படுத்தி, முழுமையாக முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். 

குறிப்பிட்ட நேரம் தூங்காமல் இருப்பது:


வளமான வாழ்க்கைக்கு நம் உடலும், மனதும் ஒத்துழைக்க அடிப்படையானது  தூக்கம் தான். தூக்கமின்றி நீண்ட நேரம் கழிப்பது, அதாவது தொலைபேசி, டிவி, மடிக்கணினி போன்றவை தோலின் இயற்கையான புதுப்பிப்பு செயல்முறையை பாதிக்கிறது. இதனால் முகம் சோர்ந்ததாக, அயர்வுடன் காணப்படும். கண் சுற்று கரும்பட்டைகள், மெலிந்த தோல், தடிப்பான ரேஷ்கள் போன்றவை ஏற்படலாம். தூக்கத்தின் போது உடல் கொழுப்புகளை சீராக வைத்து, ஹார்மோன்கள் சமநிலைப்படுத்தப்படுவதால், சருமமும் சீராக பிரகாசிக்கிறது. ஆனால் தூக்கமின்மை இவை அனைத்தையும் முற்றிலும் பாதிக்கிறது. தினமும் குறைந்தது 7–8 மணி நேரங்கள் சிறந்த உறக்கம் பெறுவது சருமத்தின் இளமையையும், பிரகாசமான தோற்றத்தையும் பாதுகாக்கும்.

சன்ஸ்கிரீன் இல்லாமல் வெளி இடங்களுக்கு செல்வது:


சன்ஸ்கிரீன் இல்லாமல்  வெயிலில் அதிக நேரம் செலவிடும் போது, சருமத்திற்கு மிகுந்த தீங்குகளை ஏற்படுத்தும். சூரியனில் உள்ள UV-A மற்றும் UV-B கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்கும்போது, அது சருமத்தில் கருமை படியச் செய்யும்.முகத்தில் சுருக்கங்கள் விரைவில் தோன்றும். மேலும், நீண்ட கால ஒளிக் கதிர்வீச்சு சரும சோர்வையும், பிரகாசமான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வெளியே செல்லும் முன் குறைந்தது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்புள்ள சன்ஸ்கிரீனை முகத்தில் மற்றும் வெளிப்படையான உடல் பகுதிகளில் தடவ வேண்டும். இது சருமத்தை ஒளிக் கதிர்களில் இருந்து பாதுகாத்து,இயற்கையான அழகை நீடிக்கச் செய்யும்.

தினமும் இரண்டில் இருந்து மூன்று முறை முகத்தை சுத்தமான நீரால் அல்லது கிளென்சர் கொண்டு கழுவி தூசி, எண்ணெய், மாசுகளை அகற்ற வேண்டும். கிளென்சர் பயன்படுத்தியது இல்லை என்றால் காய்ச்ச பாலை முகத்தில் பயன்படுத்துங்கள். அழுக்குகள் எல்லாம் நீங்கிவிடும். இதன் பிறகு தேவைப்பட்டால் டோனர் பயன்படுத்தி முகத்தின் துவாரங்களை (pores) சுருங்கச் செய்யலாம்.  டோனர் அழகு நிலையத்தில் வாங்க முடியவில்லை என்றால் அரிசி கழுவிய தண்ணீரை டோனராக பயன்படுத்தலாம். தினசரி ஈரப்பசை (moisturizer) பயன்படுத்தி தோலை ஈரமாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இயற்கை ஸ்க்ரப் அல்லது முகமூடி போட்டு இறந்த செல்களை நீக்கலாம். இவ்வாறு முறையாக முகத்தை பராமரிப்பது நீண்டகால அழகையும், இளமையும் தரும்.

தலைமுடி பராமரிப்பு:


தலைமுடி ஆரோக்கியமாக இருக்க, முதலில் முடியை  சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினசரி காற்று, தூசி, மாசு ஆகியவை தலைமுடியில் சேர்ந்து எண்ணெய் மற்றும் அழுக்கு சேருவதால் முடி மோசமாகிறது. இதை தவிர்க்க வாரத்தில் குறைந்தது இருமுறை மூலிகை திரவியங்களால் தயாரான ஸாம் பவுடர்  அல்லது இயற்கை சாம்பூ கொண்டு தலை கழுவ வேண்டும். கற்றாழை,தேங்காய் எண்ணெய்,  செம்பருத்திப்பூ, வேப்ப இலை மற்றும்  கருவேப்பிலை ஆகிய மூலிகைகள் போட்ட எண்ணெய் தடவுவது முடி வேர்களுக்கு ஊட்டமளிப்பது மட்டும் இல்லாமல் முடியை வலுப்படுத்தி  முடி உதிர்வதை குறைத்து நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்கின்றன. மேலும் உணவில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான தலைமுடி பராமரிப்பு இயற்கையான அழகை உருவாக்கி நீண்ட காலம் பராமரிக்க உதவும்.

அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி:


தினசரி உடற்பயிற்சி மூலம் நமக்கு தேவையான சக்தி, உற்சாகம், மன உறுதி ஆகியவை அதிகரிக்கின்றன. இது மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கும் தன்மையையும் கொடுக்கிறது. மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து அதிகம், மூட்டு வலி போன்ற நீண்டகால நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. 

உடற்பயிற்சி பல வகைகளில் செய்யப்படுகிறது: நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி , யோகா பயிற்சி, சைக்கிள் பயிற்சி , நீச்சல் பயிற்சி, ஜிம்மில் பயிற்சி செய்தல். முதலில் மெதுவாகத் தொடங்கி, உடலின் சக்திக்கு ஏற்ப பயிற்சியின் நேரத்தை அதிகரிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய காலை நேரம் மிகச் சிறந்தது, ஏனெனில் அந்த நேரத்தில் சுத்தமான காற்று கிடைக்கும், மேலும் நம்முடைய நாள் முழுவதையும் சுறுசுறுப்பாகக் கடக்க உதவுகிறது.

உடற்பயிற்சி  ஒரு நாள் செய்வது அல்ல.  தினமும் அன்றாட செயல்களில் எடுக்க வேண்டும். தொடர்ந்து  செய்யும்போதுதான் அதன் முழு பலன்களையும் நம்மால் அனுபவிக்க முடியும். நல்ல உணவு பழக்கவழக்கங்களுடன் கூடிய உடற்பயிற்சி செய்தல், நம்மை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிநடத்தும். ஆகவே, ஒவ்வொருவரும் தினசரி தங்கள் நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.

உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல்:   


இயற்கையான அழகை பராமரிக்க உப்பும் சர்க்கரையும் அளவுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிக உப்பு உட்கொள்வது உடலில் நீர் தங்கி முகம் வீங்கி காணப்பட வைக்கும், மேலும் தோல் உலர்ச்சி மற்றும் தடித்த தோல் போன்ற பிரச்சனைகளையும்  ஏற்படுத்தும். அதேபோல் அதிக சர்க்கரை உணவு உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்புகளை அதிகரித்து, ஜீரண சக்தியை பாதித்து முகத்தில் பிம்புகள், பருக்கள், சுருக்கங்கள் விரைவில் தோன்ற வழி வகுக்கும். அதிக சர்க்கரை தோல் செல்களை பழுதுபடுத்தி, முக அழகை கெடுக்கிறது. எனவே இயற்கையான பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தினால், தோல் சீராக ஜொலிக்கவும், முகம் இளமையாகவும் இருக்கும்.

சூரிய ஒளிக்கதிர் பாதுகாப்பு :


சூரியகதிர்கள் வைட்டமின் டி  போன்ற முக்கிய சத்துகளை தருவதோடு அதே சமயம் அதீதமாக வெளிச்சத்திற்கு உட்பட்டால் தோலில் கருமை, இளமை குறைதல், சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இயற்கையான அழகு பராமரிக்க, சூரியகதிர்களின் தீவிர UVA மற்றும் UVB கதிர்களிலிருந்து தோலை பாதுகாக்க வேண்டும். அதிகாலை 7 - 8.30 வரையும் மாலை 4-5.30 இருக்கும் சூரியகதிர் உடல் மற்றும் முக பாதுகாப்பிற்கு மிக நல்லது. மற்ற நேரத்தில் இருக்கும் சூரியக் கதிரின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.வெளியே செல்லும் போது விரைவில் ஊடுருவாத துணி, ஹாட், கூல் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்தை பாதுகாக்கலாம். இயற்கை  பொருளான  தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலோவேரா ஜெல் போன்றவை தோலில் தடவுவது சூரிய ஒளிக்கதிரியில் இருந்து தோலை பாதுகாக்கும்.

பயனுள்ள சூரிய ஒளியின் பயனுள்ள சில தகவல்களை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சூரியக்கதிர் கண்ணுக்கும், தோலுக்கும் பாதுகாப்பு தரும்:


பார்வை மற்றும் தோல் சீராக்கத்திற்கு காலை நேர சூரியக்கதிர்கள் மிகுந்த பயனளிக்கின்றன. காலையில்   கிடைக்கும்  சூரிய ஒளி கண்களின் ஆரோக்கியத்திற்கும் சருமத்தின் பிரகாசத்திற்கும் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. காலை நேரத்தில் கண்களுக்கு நேரடி சூரிய ஒளியைச் சில நிமிடங்கள் காண்பது, கண்பார்வையைத் தூண்டும் முக்கியமான மேலட்டோந்தின்(Melatonin) மற்றும் செரோட்டோனின்(Serotonin) ஹார்மோன்களின் சுழற்சியைச் சீராக்குகிறது. இது கண்கள் சோர்வடையாமல் உற்சாகமாக இருக்க பெரிதும் உதவுகிறது. தோல் பகுதிக்கு வந்தாலோ இந்த ஒளி வெப்பத்தால் தோலில் உள்ள நச்சுகள் வியர்வையாக வெளியேற உதவுகிறது. மேலும், UV-பி  கதிர்கள் தோலின் மேற்பரப்பில் விட்டமின் டி  உற்பத்தியை தூண்டுவதால், தோல் செல்கள் புதுப்பிக்கப்பட்டு, இளமையான தோற்றத்தை வழங்குகிறது. கதிர்களில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சக்தி முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்க உதவுகிறது. அதனால், காலை நேர சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணுக்கும் தோலுக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். 

மெலனின் தோலின் இயற்கையான நிறத்தை தக்க வைக்கும் :


அதிகாலை நேரத்தில்  கிடைக்கும் சூரிய ஒளி, தோலில் மெலனின் உற்பத்தியை இயற்கையாக தூண்டுகிறது. இந்த நேரத்தில் UV-பி கதிர்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளதால், மெலனின் சமநிலையை சீராக கட்டுப்படுத்த உதவுகிறது. இது தோல் நிறத்தை  மேம்படுத்திக் கொள்ள உதவும். 

குறிப்பாக, அதிக மெலனின் சுரப்பால் ஏற்படும் கருமை படர்ச்சி (hyperpigmentation), மஞ்சள் நிறம், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் குறைவடைகின்றன. இதனுடன், மெலனின் சரியான அளவில் உற்பத்தியாகுவதால், தோல் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும், இது தோலை பிரகாசமடையவும், இயற்கையாக பளிச்சென்ற தோற்றம் பெறவும் செய்யும். காலை சூரிய ஒளியின் சீரான தாக்கம், மெலனின் சுழற்சியை சமநிலைப்படுத்தி, தோலின் இயற்கையான நிறத்தை நிலைத்து வைக்க உதவுகிறது. 

ஆண்டி-பாக்டீரியல் கவசம்:


காலை நேர சூரியக்கதிர்கள் இயற்கையான ஆண்டி-பாக்டீரியல் (Anti-bacterial) தன்மை கொண்டதால் அதிகாலையில்  கிடைக்கும்  சூரிய ஒளியில் குறைந்த அளவிலான UV-பி கதிர்கள் காணப்படும். இதனால் தோலின் மேற்பரப்பில் இருக்கும் நச்சு பொருட்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் தன்மையை இது கொண்டுள்ளது. குறிப்பாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சிரங்கு போன்ற சரும பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்க இது பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. 

குறிப்பாக, சூரிய ஒளி உடலில் செரடோனின் மற்றும் விட்டமின் டி-யை ஊக்குவிப்பதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, பாக்டீரியாவை எதிர்க்கும் திறனை மேம்படுத்துகிறது. எனவே, தினமும்  காலை சூரிய ஒளியில் இருப்பது, உங்கள் தோலை பாதுகாக்கும் இயற்கையான ஆண்டி-பாக்டீரியல் கவசமாக செயல்படுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறன்:


சூரிய ஒளி சருமத்தின் மேல்படும் போது, உடலின் உள் வெப்பநிலை ஒழுங்குபடுத்தப்படுவதால்  இரத்தக் குழாய்கள் விரிந்து, இரத்த ஓட்டம் சீராகும். சீரான இரத்த ஓட்டம் என்பது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்துகள் எளிதாக சென்றடைவதற்குத் துணைபுரிவது. தோலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, முகத்தில் இயற்கையான பிரகாசம் ஏற்படுகிறது. மேலும், இரத்த சுத்திகரிப்பு நடைபெற்று, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற  பிரச்சனைகள் குறையும். இதற்குப் பிறகும், அதிக இரத்த ஓட்டம் மூளைக்கு கூடுதல் ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவுவதால், சோர்வை குறைத்து புத்துணர்ச்சி கொடுக்கும். காலை சூரியக்கதிர்களின் வெப்பமும் ஒளியும் சேர்ந்து இந்த செயல்முறையை இயற்கையாக தூண்டும். 

நச்சுக்கள் வெளியேற்றம்:


அதிகாலை  சூரிய ஒளி தோலில் படும்போது, உடல் மெதுவாக வெப்பமடைந்து, சிறிது வியர்வை ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த வியர்வை வழியாக உடலில் தேங்கிய நச்சுப்பொருட்கள் வெளியேறுகின்றன. 
சூரிய ஒளி மூலமாக உற்பத்தியாகும் விட்டமின் டி , கருப்பை, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டி, சுத்திகரிப்பு செயல்களை வேகமாக செய்ய வைக்கிறது. 

தோல் வகைக்கேற்ப காலைநேர சூரியக்கதிரை பயன்படுத்த வேண்டும்:


தோல் வகைகளுக்கேற்ப சூரியஒளி பயன்பாடு வித்தியாசமாக அமைகிறது. ஒவ்வொரு தோல் வகைக்கும் (உலர் தோல் (Dry Skin), கொழுப்பு தோல் (Oily Skin), கலந்த தோல் (Combination Skin), சென்ஸிடிவ் தோல் (Sensitive Skin)) சூரிய ஒளியின் தாக்கமும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் வேறுபடும். (உலர் தோல் (Dry Skin) கொண்டவர்கள் காலை 6:30 முதல் 7:30 வரை சூரிய ஒளியைப் பெறுவது சிறந்தது, ஏனெனில் மென்மையான வெப்பம் இரத்த ஓட்டத்தை தூண்டும் போது தோல் ஈரப்பதத்தை இழக்காமல் இருக்கும். கொழுப்பு தோல் (Oily Skin) உள்ளவர்களுக்கு சூரிய ஒளியின் ஆன்டி-பாக்டீரியல் தன்மை பருக்கள் மற்றும் பிற தோல் தொற்றுகளை கட்டுப்படுத்த உதவுகிறது, ஆனால் நீண்ட நேரம் ஒளியில் இருப்பது தேவையில்லை. 


கலந்த தோல் (Combination Skin)கொண்டவர்கள் மிதமான நேரம் (10-15 நிமிடங்கள்) காலை ஒளியை அனுபவிப்பது போதுமானது. சென்ஸிடிவ் தோல் (Sensitive Skin) உள்ளவர்கள் காலை நேர சூரிய ஒளியை மிகவும் குறைந்த நேரம் மட்டுமே எதிர்கொள்வது நல்லது, ஏனெனில் UV கதிர்கள் காரணமாக எளிதில் எரிச்சல் ஏற்படுத்தலாம். அதனால் தோலின் வகையைப் பொருத்து சரியான நேரத்தில்  சூரிய ஒளியைப் பயன்படுத்தினால், விட்டமின் டி  உற்பத்தி, தோல் சீராக்கம், செல்கள் புதுப்பிப்பு போன்ற நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். 

கவனத்தில் கொள் நண்பா!நண்பி!

  • அதிக நேரம்  சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும்.
  • அதிகாலை நேரத்திலேயே சூரிய ஒளி பெறுவது மிகவும் முக்கியம் (அதிகாலை 6:30 முதல் 8:30 மணி வரை).
  • முகத்தில் தேன், ஆலிவேரா ஜெல், தேங்காய் எண்ணெய்(எந்த எண்ணெயும் பயன்படுத்தலாம்) போன்றவற்றை தடவிக்கொண்டு சூரிய ஒளி பெறலாம். முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்:


உடல்,தோல் ஆரோக்கியத்திற்கும் மனநலத்திற்கும்  உணவுப் பழக்க வழக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவு பழக்கம்  காய்கறிகள், பழங்கள், முழுத் தானியங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், புரதம் அதிகம் உள்ள பருப்பு மற்றும் மசாலா வகைகள் ஆகியவற்றை சமமாகக் கொண்டுள்ள உணவைக் குறிக்கும். அதே நேரத்தில் எண்ணெய், உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள ஜங்க் உணவுகளை தவிர்த்து, இயற்கைச் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் சரியான நேரத்தில் காலை, மதியம், இரவு உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது ஜீரணத்தை சீராக்கி உடலை சக்திவாய்ந்ததாக மாற்றும். அதிகப்படியான உண்ணல், விரைவான உண்ணல் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். உடல் தேவைக்கேற்ப தண்ணீர் பருகி, உணவை மென்று சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். உணவை சமநிலையாகத் தேர்ந்தெடுத்து சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.


மேலும் வாசிக்க: BH Boss Tamil