Natural care:இயற்கை உணவால் அழகை மாற்றலாம்...48 ரூபாயில் உன்னத அழகு!...
Natural Beauty and Health Care : மூன்று வேலையும் சமைத்த உணவு வகைகளையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா...?கண்டிப்பாய் ருசிக்கும்.அது எப்படி.....? சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே அதுபோல், முதலில் இயற்கை உணவுகளை உட்க்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். சமைத்த உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் உள்ள வேறுபாட்டினை ஒப்பிட்டு பாருங்கள். சமைத்த உணவுகளில் சத்துக்கள் வீணடிக்கபடுகின்றன. மேலும், உணவு சமைக்கப்படுவதால், அவற்றை நம் ஜீரண உறுப்புகள் கூட முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக சமைத்த உணவில் உள்ள பெரும்பாலான சத்துக்கள், கழிவுகளாகவே வெளியேற்றப்படுகின்றன. இதனாலேயே, மனிதனுக்கு இரும்புசத்துக் குறைவதனால் ஒரு நோய்...சுண்ணாம்புச் சத்து குறைவதனால் ஒரு நோய்...புரத சத்து குறைவதால் ஒரு நோய்...என நோய்கள் பலவிதமாய் மனித உடலை ஆட்டுவிக்கிறது. அதனால் இயற்கை உணவுகளே என்றும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இயற்கை உணவுகள் சமைத்த உணவைவிட மிகவும் பயன் தரக்கூடியன. இயற்கை உணவுகளில் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் ...